விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா செய்த தைரியமான செயல்... ஆனால் தனுஷால் ஏன் செய்யமுடியவில்லை?
நடிகர் தனுஷ் ஏன் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆக்டிவாக இல்லை என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். அவரின் ஒரு ஒரு பதிவிலும் ரசிகர்கள் தனுஷ் பிரிவு குறித்து கேள்வியோ, அறிவுரையோ வழங்கினாலும் அதை கவனத்தில் கொள்ளாது அவர் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
ஆனால் தனுஷ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தனது சமூக வலைத்தளப் பக்கமே வரவில்லை. நேற்றைய தினம் அவர் நடித்துள்ள மாறன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. எப்போதும் தனது படங்களுன் அப்டேட்டுகளை வெளியிடும் தனுஷ் இம்முறை அதுகுறித்த பதிவுகளை வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் பல்வேறு கேள்வியெழுப்பி வருகின்றனர்.
You May Like This