நடிகர் தனுஷ் திடீர் டெல்லி பயணம்; அரசியல் வருகை குறித்து ஆலோசனையா?
actor dhanush delhi visit sparks debate on political entry: நடிகர் தனுஷ் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அரசியல் தொடர்பாக முக்கிய நபர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள சென்றுள்ளாரா என விவாதம் எழுந்துள்ளது.
நடிகர் தனுஷ் திடீர் டெல்லி பயணம்
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், தனுஷ் ரசிகர்கள் மன்றத்தை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்ததோடு, ரசிகர்கள் மன்றத்தை, நற்பணி இயக்கமாக மாற்றினார்.

சமீபத்தில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தனுஷ் அதிமுகவில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது என கேட்கப்பட்டதற்கு, இன்றைக்கு ஏழை எளிய மக்கள் இளைஞர்கள் மத்தியில் தனுஷ் என்று சொன்னால் அது ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது.
அவரைப் போன்று நடிகர்கள் எங்கள் இயக்கத்திற்கு வந்தால் அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்காமல் என்ன செய்வோம்? என பதிலளித்தார்.
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டபோது, அது தனுஷின் தனிப்பட்ட முடிவு. கட்சி தொடங்கினால் தொடங்கட்டும் என பதிலளித்தார்.
அதேவேளையில், ஏற்கனவே புதிய அரசியல் கட்சியின் பெயரை தனுஷின் சார்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருப்பதாகவும், 'தமிழக எழுச்சிக் கழகம்' என்று கட்சிக்கு பெயர் சூட்டியிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நடிகர் தனுஷ் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் அவர் முக்கிய பிரமுகர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கட்சியை பதிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், தனுஷ் என்ன காரணத்திற்காக டெல்லி சென்றார்? யாரை சந்திக்க சென்றுள்ளார் என அவரது ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil