தனுஷின் டி 43 ... ஐதராபாத்தில் தொடங்கிய ஷுட்டிங் !

shooting dhanush hyderabad d43
By Irumporai Jul 01, 2021 11:12 AM GMT
Report

தி க்ரே மேன் படப்பிடிப்பு காரணமாக  பல வாரங்கள் ,குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியிருந்தார் தனுஷ் . சென்னை திரும்பியுள்ள நிலையில் இன்று படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார்

 அமெரிக்க சென்று திரும்பி வந்துள்ள  தனுஷ் தமிழில் பல படங்களில் நடிக்க உள்ளார் .

அதில் முதலாவதாக கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷின் 43 வது படமான இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது .

அதில்தான் தனுஷ் தற்போது  கலந்து கொண்டார் . இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார் .

ஜீ . வி . பிரகாஷ் இசையமைக்க , விவேக் பாடல்கள் எழுதுகிறார் . இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது .

D43 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜுலையில் தொடங்குவதாக சத்யஜோதிதி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்தப் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் , சேகர் கம்முலா , மாரி செல்வராஜ் , ராட்சசன் ராம்குமார் என பலரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கயிருக்கிறார் .