இது நல்லாவா இருக்கு...மனைவியை பார்த்து தனுஷ் இப்படி சொல்லலாமா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்

dhanush aishwarya Thiruchitrambalam aishwaryarajinikanth payani
By Petchi Avudaiappan Mar 17, 2022 04:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ஆல்பம் பாடல் வெளியான நிலையில் நடிகர் தனுஷ் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த பிரச்சனையிலிருந்து விடுபட மீண்டும் திரையுலக பணிகளில் ஈடுபட்டுள்ள ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார்.

இந்த பாடல் இன்று மாலை வெளியானது. இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார். 

இதனை முன்னிட்டு ஐஸ்வர்யாவிற்கு பாடலை தமிழில் ரஜினிகாந்த், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு ஆகியோர் வெளியிட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது பதிவில், பயணி மியூசிக் வீடியோவிற்காக என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.