‘ஆயிரத்தில் ஒருவன் கெட்டப்பா?’ - தனுஷ் பிறந்தநாள் காமன் டிபி! ரசிர்கள் உற்சாகம்!

release birthday dhanush common dp
By Anupriyamkumaresan Jul 28, 2021 04:14 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

தனுஷ் பிறந்தநாளையொட்டி காமன் டிபி வெளியிட்டிருக்கிறார்கள், அவரது ரசிகர்கள். இயக்குநர் செல்வராகவன் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் வெளியிட்டிருக்கிறார்.

வரலாற்று நாயகன் தோற்றத்தில் இருந்து இந்த டிபியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் தனுஷ் நாளை தனது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

‘ஆயிரத்தில் ஒருவன் கெட்டப்பா?’ - தனுஷ் பிறந்தநாள் காமன் டிபி! ரசிர்கள் உற்சாகம்! | Dhanush Birthday Today Common Dp Release

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட தனுஷ் இதுவரை நான்கு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

தற்போது, கார்த்திக் நரேனின் ‘தனுஷ்43’ படத்தில் நடித்துவரும் தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, இயக்குநர்கள் ராம்குமார், சேகர் கம்முலா, மாரி செல்வராஜ் இயக்கங்களில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில், தனுஷின் பிறந்தநாளையொட்டி காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு தங்க நாணயம் மாடலிலும் ஒலிம்பிக் பதக்கம் மாடலிலும் வடிவமைத்திருக்கும் காமன் டிபியில் வரலாற்று நாயகன் போல் காட்சியளிக்கிறார் தனுஷ். அந்தப் பதக்கத்தில், தனுஷ் வாங்கிய விருதுகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் சேகர் கம்முலா, செல்வராகவன் உள்ளிட்டோர் இந்த காமன் டிபியை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

‘ஆயிரத்தில் ஒருவன் கெட்டப்பா?’ - தனுஷ் பிறந்தநாள் காமன் டிபி! ரசிர்கள் உற்சாகம்! | Dhanush Birthday Today Common Dp Release

இந்த காமன் டிபியை ‘ஆயிரத்தில் ஒருவன் கெட்டப்பா? ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால், ஒலிம்பிக் பதக்க கெட்டப்பா? கிரேக்க கடவுளா?’ என்றெல்லாம் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.