Thursday, Jul 17, 2025

தங்க நாணயத்தில் தனுஷ்... பிறந்தநாள் காமன் டிபி வெளியீடு

Actor Dhanush HappyBirthdayDhanush
By Petchi Avudaiappan 4 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 நடிகர் தனுஷ் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் சார்பில் காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர்,தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு அசுரனாக திகழும் தனுஷ் இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவர் நடிப்பில் அடுத்ததாக கார்த்திக் நரேனின் ‘தனுஷ்43’ , செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் -2, இயக்குநர்கள் ராம்குமார், சேகர் கம்முலா, மாரி செல்வராஜ் படங்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளையொட்டி காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது. தங்க நாணயம் மாடலிலும் ஒலிம்பிக் பதக்கம் மாடலிலும் வடிவமைத்திருக்கும் காமன் டிபியில் தனுஷ் வரலாற்று நாயகன் போல் காட்சியளிக்கிறார்.

அந்தப் பதக்கத்தில், தனுஷ் வாங்கிய விருதுகளும் பட்டியலிடப்பட்டுள்ளது. இயக்குநர்கள் சேகர் கம்முலா, செல்வராகவன் உள்ளிட்டோர் இந்த காமன் டிபியை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.