தனுஷ் பாடலை பாடியதால் ரத்த வாந்தி எடுத்த பிரபல பாடகர்… - வெளியான தகவல்... - ஷாக்கான ரசிகர்கள்...!
தனுஷ் பாடலை பாடியதால் பிரபல பாடகர் ரத்த வாந்தி எடுத்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருண்ராஜா காமராஜ்
‘ராஜா ராணி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் அருண்ராஜா காமராஜ். இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு, கடந்த 2017ம் ஆண்டு ‘மரகத நாணயம்’ படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.
இதனையடுத்து, ‘தெறி’, ‘காக்கிசட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ படத்தை இயக்கினார்.
இவரின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அருண் ராஜா காமராஜின் மனைவி உயிரிழந்து ஒரு வருடத்தில் இவர் 2ம் திருமணம் செய்து கொண்டார். அருண் ராஜா காமராஜு, இறந்த மனைவி சிந்துஜாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரத்த வாந்தி எடுத்த அருண்ராஜா காமராஜ்
தனுஷ் பாடலை பாடியதால் அருண்ராஜா காமராஜின் ரத்த வாந்தி எடுத்ததாக தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருண்ராஜா காமராஜ் ஹை பிட்ச்சில் பாடுவதில் புகழ்பெற்றவர். “கபாலி”-ன் “நெருப்புடா” பாடல், “பைரவா”வின் “வரலாம் வரலாம் வா”, “காலா”வின் “நிக்கல் நிக்கல்” போன்ற பல பிரபலமான பாடல்களை இவர் பாடி இருக்கிறார்.
நடிகர் தனுஷுக்காக ஒரு பாடல் பாடியபோது வாயிலிருந்து ரத்தம் வந்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில்,
நடிகர் தனுஷ் நடித்த “அசுரன்” படத்தில் “வா அசுரா” என்ற பாடல் நான் எழுதி பாடியிருந்தேன்.
இந்த பாடலை பாடி முடித்துவிட்டு நான் வீட்டிற்குச் சென்றேன். வீட்டிற்கு போனதும், என் தொண்டைப் பகுதி மிகவும் வலித்தது. எச்சில் துப்பும்போது ரத்தமாக வந்தது. இதனால் நான் ரொம்ப பயந்துபோயிட்டேன். அந்தப் பாடலை நான் மிகவும் ஹை பிட்ச்சில் பீறிட்டு பாடினேன். அதனால், என் தொண்டை கிழிந்துவிட்டது. அதன் பிறகு நான் பாடுவதற்கே பயந்தேன் என்றார்.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil