தனுஷ்-அருண் மாதேஷ்வரன் இணையும் புதிய படத்தில் கைக்கோர்க்கும் பிரபல இசையமைப்பாளர்? - வெளியான சுவாரஸ்ய தகவல்

dhanush new project arun matheshwaran santhosh narayanan joins
By Swetha Subash Dec 29, 2021 05:47 AM GMT
Report

தனுஷும், அருண் மாதேஸ்வரனும் இணையும் புதிய படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அருண் மாதேஸ்வரன்.

இவர் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோரை வைத்து ராக்கி என்ற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ராக்கி படம் மட்டுமின்றி செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து அருண் மாதேஸ்வரன் சாணிக்காயிதம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் தனுஷும், அருண் மாதேஸ்வரனும் இணையும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் ஏற்கனவே தனுஷ் நடித்த வடசென்னை, கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தனுஷ் தயாரித்த காலா படத்துக்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.