தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்தில் வெளியான புதிய திருப்பம் : அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

dhanush தனுஷ் aishwaryarainikanth ஐஸ்வர்யா
3 மாதங்கள் முன்

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து ஆறு மாதங்களுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்டது என வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த வாரம் இருவரும் இல்வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். 

இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனர். 

இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவருகின்றன. அந்த வகையில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு திடீரென எடுக்கப்பட்டது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆறு மாத காலமாகவே இருவரும் பேசி ஒருமனதாக முடிவு செய்த பின்னரே பிரிந்துள்ளதாக தகவல்கள் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூறியுள்ளனர். மேலும் இவர்களின் விவாகரத்து முடிவு மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தால், நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் தெரிவித்துள்ளனர். 

ஆனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மறுபடியும் இணைய வேண்டும் என்று திரையுலகை சார்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என  பலர் வலியுறுத்தி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தகக்து. 

You May Like This


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.