விவாகரத்து அறிவிப்புக்கு பின்னரும் மல்லுக்கட்டும் தனுஷ் - ஐஸ்வர்யா : கோபமாகும் ரசிகர்கள்

dhanush julie aishwaryarajinikanth bbultimate
By Petchi Avudaiappan Feb 17, 2022 10:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் நடிகர் தனுஷ் , இயக்குநர் ஐஸ்வர்யா குறித்து நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் அறிவித்தனர்.

இருவரையும் இணைக்க இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் விவாகரத்து தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீள தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது திரையுலக பணிகளில் பிசியாக உள்ளனர்.  

இதனிடையே காதலர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா தான் தற்போது இயக்கி வரும் ரொமான்டிக் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருந்தார். அன்றைய தினமே தனுஷின் மாறன் படத்தின் போஸ்டர் வெளியானது. தொடர்ந்து தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் பெயரை மாற்றாமல் இருக்கும் ஐஸ்வர்யா புரோமோவில் தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை தனுஷ்  வெளியிட இணையத்தில் செம வைரலானது. இதனைப் பார்த்த ர்சிகர்கள் ஐஸ்வர்யாவைப் போல அமோசமான பழிக்குப்பழி விவகாரங்களில் தனுஷ் ஈடுபடுகிறார் என்றும், அதற்காக தான் இருவரும் அப்டேட் தகவல்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.