ஹீரோவாகும் நடிகர் தனுஷின் மகன் - புது திட்டம் போட்ட ஐஸ்வர்யா..!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். அவர்களுக்கு யாத்ரா,லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இருவரும் தாயுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வருகிறார்கள். மூத்த மகன் யாத்ரா தனது தாத்தாவை போன்று உள்ளதாக ரஜினி ரசிகர்களும்,எங்க அண்ணன் மாதிரி இருப்பதாக தனுஷ் ரசிகர் கூறி வருகின்றனர்.

மேலும் சிலரோ இளைய மகன் லிங்கா தான் தனுஷ் மாதிரி இருப்பதாக கூறி வருகின்றனர். 15 வயதாகும் யாத்ராவுக்கு அக்டோபர் மாதம் வந்தால் 16 வயதாகிவிடும்.
இந்நிலையில் அவரை வைத்து படம் எடுக்க தாயார் ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாத்ராவை ஹீரோவாக வைத்து படம் இயக்க ஐஸ்வர்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ராகவா லாரன்ஸின் துர்கா பட வேலையை முடித்துவிட்டு யாத்ரா பட வேலையை துவங்குவாராம்.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு IBC Tamil