தனுஷ் அண்ணன் பிறந்தநாள் அன்று ஐஸ்வர்யா செய்த செயல் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனுக்கு ஐஸ்வர்யா பிறந்த நாள் வாழ்த்து கூறிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
18 ஆண்டுகளாம் சந்தோஷமாக வாழந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் விவகாரத்து செய்வதாக அறிவித்தனர்.
இவர்களின் இந்த அறிவிப்பு அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும்,ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு பிரிவதாக அறிவித்த பின்னர,தங்களது வேலைகளில் பிசியாக மாறினர். இதையடுத்து அவர்கள் பார்டி ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்த போது கூட பேசவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் செல்வராகவனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.அவருக்கு பல திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே ஐஸ்வர்யாவும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்வராகவன் உடனிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து என்னுடைய,நண்பன்,மற்றும் எனக்கு அப்பா போன்றவர் செல்வராகவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.