“என் அப்பா... எங்கள் ஜில்லுமா...” - சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சவுந்தர்யா - வைரலாகும் டுவிட்

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Soundarya Rajinikanth
By Nandhini Aug 16, 2022 11:04 AM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷ், மற்றும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

dhanush - Aishwarya rajinikanth

மீண்டும் கர்ப்பமான சவுந்தர்யா சவுந்தர்யா

கடந்த 2010-ம் ஆண்டு அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். சவுந்தர்யாவிற்கு வேத் என்ற மகன் உள்ளார். சவுந்தர்யாவிற்கு அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இதனையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு விசாகன் என்பவரை 2வதாக திருமணம் செய்துகொண்டார்.

குட் நியூஸ் சொன்ன சவுந்தர்யா

இந்நிலையில், ஐஸ்வர்யாவின் விவாகரத்து முடிவால் மிகுந்த மன வருத்ததில் இருந்த ரஜினிக்கு தற்போது சவுந்தர்யா குட் நியூஸ் ஒன்றை சொல்லியுள்ளார்.

மீண்டும் கர்ப்பமாகி உள்ளார் சவுந்தர்யா. சமீபத்தில் சவுந்தர்யாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

47வது ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தற்போது தன்னுடைய 47வது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில் ரஜினிகாந்த்திற்கு திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டுவிட்டரில் ட்ரெண்டிங்கிலும் #47yearsofRajinism என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

வாழ்த்து சொன்ன சவுந்தர்யா

தன்னுடைய அப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்து சவுந்தர்யா டுவிட் செய்துள்ளார். அந்த பதிவில், அம்மா லதா, ரஜினிகாந்த்திற்கு பூக்கொத்து கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, எங்கள் அன்பான ஜில்லுமா.. அப்பாவின் மிகப்பெரிய ரசிகன் மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார் என்று பதிவிட்டுள்ளார்.