ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து சொன்ன தனுஷ் - வைரலாகும் டுவிட் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Nandhini Jun 18, 2022 06:06 AM GMT
Report

விவாகரத்து

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ரஜினி கோபம்

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார் .

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்துவிட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து சொன்ன தனுஷ் - வைரலாகும் டுவிட் - மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Dhanush Aishwarya Rajinikanth

ரஜினிக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்

இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த்தின் 'தலைவர் 169' படத்தின் 'ஜெயிலர்' தலைப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தனுஷ். இந்த டுவிட்டரைப் பார்த்த அவரது ரசிகர்கள் தலைவர் மேலே தனுஷுக்கு இன்னும் அன்பும், மரியாதையும் குறையவே இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.