“ஐ லவ் யூ மா..!” - மனைவிக்கு சூசகமாய் காதல் சொன்ன தனுஷ்... - நண்பர்களிடம் கண்கலங்கிய ரஜினி

good news fans happy dhanush aishwarya rajini happy
By Nandhini Feb 04, 2022 11:31 AM GMT
Report

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடிகர் தனுஷிம், மனைவி ஐஸ்வர்யாவும் இருவரும் விவகாரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது ஒட்டுமொத்த திரையுலகத்தையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனையடுத்து, திரைத் துறையிலும், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் ரஜினிக்காகவும், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவுக்காகவும், தனுஷ் – ஐஷ்வர்யாவிடம் பலமுறை பஞ்சாயத்து பேசி வந்தனர். இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் தனுஷின் அடுத்த படமான ‘மாறன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகி வைரலானது. “ஏய்.. இது பொல்லாத உலகம்.. நீ ரொம்ப ஷார்ப்பாய் இரு..’’ என்று தொடங்கும் படல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜி.வியின் இசை, தனுஷின் வேகமான ஸ்டைல் நடனம் இணையத்தை கலக்கி வருகிறது. பாடலின் நடுவே வரும், ‘ஏன் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா.. நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூமா..” என்ற வரிகள் தான்.

முதலில் இப்பாட்டில் இந்த வரிகள் கிடையாது என்றும், சமீபத்தில் தனுஷ் பாடலாசிரியர் விவேக்கிடம் இதுபோன்ற வரிகள் வேண்டும் என்றும் கேட்டு வாங்கி மீண்டும் பாடி ரிக்கார்டிங் செய்து கொடுத்ததாகவும் படக்குழுவினர் சொல்கின்றனர்.

தனுஷ் தன் மனைவி ஐஷ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பி, அவருக்காக இதை செய்திருப்பதாக வெளியான தகவல், ரஜினியை நிம்மதியடைய வைத்திருக்கிறது. ‘மாப்பிள்ளை சமாதானமாகிட்டார். இனி மகளையும் சமாதானப்படுத்தி நல்லபடியா வாழ்ந்தா நல்லா இருக்கும்” என்று நண்பர்களிடம் கண்கலங்கினாராம் ரஜினி. தலைவா சீக்கிரமே ‘மகிழ்ச்சி..’ன்னு சொல்லுங்க என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.