தனுஷ் அருமையான பையன்..தங்க பையன்..நல்ல மாப்பிள்ளை - வைரலாகும் ரஜினிகாந்தின் பழைய வீடியோ

Dhanush Rajinikanth Viral Video Speech Aishwarya R
By Thahir Jan 28, 2022 07:01 PM GMT
Report

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிவதாக அறிவித்த நிலையில் அவர்கள் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ காட்சி ஒன்று தற்போது வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா மட்டுமின்றி,பாலிவுட்,ஹாலிவுட் ஆகியவற்றில் நடித்து வரும் நடிகர் தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கூட்டாக சமூக வளைத்தளத்தில் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு அவர்களது ரசிகர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, `காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளராக இருந்த தனுஷ் குறித்து பேசிய வீடியோ பதிவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

அந்த வீடியோ காட்சியில் நடிகர் தனுஷ் குறித்து பேசிய ரஜினிகாந்த்,தனுஷ் என்னுடைய மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை அருமையான பையன்,நல்ல பையன்,அப்பா அம்மாவை மதிக்கிறார்.

பெற்றோர்களைத் தெய்வமாக கருதுகிறார். மனைவியை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார். தனுஷ் ஒரு நல்ல அப்பா; நல்ல மாப்பிள்ளை; நல்ல மனிதர்; நல்ல திறமைசாலி’ எனப் புகழ்ந்து பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.