இளைய மகனை இறுக்கமாக கட்டியணைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.... - வைரலாகும் புகைப்படம்...!

Dhanush Aishwarya Rajinikanth Viral Photos
By Nandhini 2 மாதங்கள் முன்

தன்னுடைய இளைய மகனை இறுக்கமாக கட்டியணைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தனுஷ் - ஐஸ்வர்யா

விவாகரத்து நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து வந்தார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தனர். ரசிகர்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து விடுங்கள் என்று சமூகவலைத்தளங்களில் பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா சுமூக முடிவு

இதனையடுத்து, சமீபத்தில் நடிகர் தனுஷ். ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

dhanush-aishwarya-linga-viral-photo

மகனை கட்டியணைத்த ஐஸ்வர்யா

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், தன் இளைய மகன் லிங்காவை இறுக்கமாக கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.