மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா : குஷியில் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்
தனுஷ் ஐஸ்வர்யா ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விவாகரத்தான தனுஷ் ஐஸ்வர்யா
காதல் திருமணம் செய்து கொண்ட தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர்,கடந்த சில மாதங்கலுக்கு முன்பு பிரிந்தனர் இவர்களின் பிரிவு அவர்களின் குடும்பத்தினரை பாதிக்கக்கூடாது என்றும் குறிப்பாக அவர்களின் குழந்தைகளின் மனதை புண்படுத்த கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று பிரிந்த இந்த ஜோடி மீண்டும் சந்தித்துள்ளனர், தனுஷ் ஐஸ்வர்யா இவர்களின் மூத்த மகன் யாத்ரா இவரின் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு சென்றார் ஐஸ்வர்யா.
அங்கு நடந்த விளையாடு போட்டியில் முதலிடத்தை பிடித்த பெற்றுள்ளார் யாத்ரா , அதற்காக பரிசு வாங்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இன்றைய நாளைய தொடங்க என்ன வழி என்றுக் கூறி, தனது மகனின் கேப்டன் பொறுப்பேற்பை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்
மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா
இந்த நிலையில் இந்த விழாவிற்கு நடிகர் தனுஷூம் பங்கேற்றுள்ளார், மனைவி ஐஸ்வர்யா உடன் இணைந்து போட்டோ எடுத்துள்ளார். பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாசும் இந்த போட்டோவில் தன் குடும்பத்தாருடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.