எல்லாம் நல்லபடியா முடிந்தது - குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

DhanushAishwarya AishwaryaRajinikanth AishwaryaR.Dhanush NewAlbumSong
By Thahir Feb 25, 2022 04:38 AM GMT
Report

இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் தனுஸ்.இவருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இருவரும் கடந்த மாதம் பரஸ்பரமாக பிரிய உள்ளதாக அண்மையில் சமூக வளைதலங்களில் அறிவித்திருந்தனர்.

எல்லாம் நல்லபடியா முடிந்தது - குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | Dhanush Aishwarya Good News Album

அவர்களின் விவாகரத்து அறிவிப்பு கோலிவுட் வட்டாரம் மட்டுமின்றி குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் விவகாரத்து அறிவிப்புக்கு பின் தங்களின் வழக்கமான பணிகளில் பிசியாக இருந்தனர். இந்நிலையில் ஆல்பம் ஒன்றை ஐதராபாத்தில் தங்கி தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார் ஐஸ்வர்யா.

எல்லாம் நல்லபடியா முடிந்தது - குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | Dhanush Aishwarya Good News Album

இதனிடையே இந்த பாடலின் புரோமோ வீடியோ கடந்த காதலர் தினத்தன்று வெளியானது. முசாபிர் என்ற பாடல் பல மொழிகளில் தயாராகியுள்ளது.

இந்த பாடலை தெலுங்கில் சாகரும்,மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும்,தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த பாடலின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

You May Like This