சோகத்தில் தனுஷ் ... மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா : என்னதான் நடக்குது என புலம்பும் ரசிகர்கள்

Rajinikanth dhanush aishwarya தனுஷ் ஐஸ்வர்யா valentinesday february14
By Petchi Avudaiappan Feb 11, 2022 12:38 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிப்ரவரி 14 ஆம் தேதியான காதலர் தினத்தை தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே கடந்த மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காதலித்து திருமணம் செய்த இவர்கள் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின் வரும் முதல் காதலர் தினத்தை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் தனுஷூக்கு நிச்சயம் காதலர் தினம் கஷ்டமான நாளாக இருக்கும் என ரசிகர்கள் வருத்தப்படும் நிலையில், ஐஸ்வர்யாவோ செம மகிழ்ச்சியில் உள்ளார். 

காரணம் காதல் பாடல்களை அழகாக எடுப்பதில் வல்லவரான ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்புக்கு பின் மீண்டும் காதல் பாடல் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த பாடல் காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதால் அவருக்கு காதலர் தினம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும் என கருதப்படுகிறது.