மீண்டும் சேர்ந்து வாழ தனுஷுக்கு அழைப்பு விடுத்த ஐஸ்வர்யா - உச்சக்கட்ட கோபத்தில் ரஜினிகாந்த்
கடந்த 17 ஆம் தேதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது சமூக வளைதல பக்கத்தில் 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம்.
தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இந்த செய்தி அறிந்த தனுஷ் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.என்ன தான் பிரச்சனை வந்தாலும் இப்படி முடிவு எடுக்க கூடாது பிரச்சனைகளை பேசி தீர்வு காண வேண்டும் என பலரும் தங்கள் கருத்துகளை சமூக வளைதல வாயிலாக தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சமாதானம் செய்யும் முயற்சியில் குடும்பத்தினர் இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் பிரிவு அறிவிப்பால் நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் பிள்ளைகளான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனபது ரஜினியின் கருத்தும் கூட.
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ரஜினி வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கிறாராம். இவரின் நிலையை லதா ரஜினிகாந்த் தனது மகளான ஐஸ்வர்யாவிடம் எடுத்துகூறியிருக்கிறார்.
நீங்கள் மீண்டும் பழைய படி சேர்ந்து வாழ்ந்தால் தான் அப்பா பழைய நிலைக்கு திரும்புவார் எனவும் அப்போது தான் அவரின் கோபம் தீரும் எனவும் தனது மகளிடம் லதா பேசியிருக்கிறார்.
இதை ஏற்றுக்கொண்ட ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷிடம் பேசியிருக்கிறார் அதற்கு தனுஷ் உன்னை போல் என்னால் திடீரென மாறமுடியாது எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தனுஷ் தான் எடுத்த முடிவில் நிலையாக இருப்பதாக கூறப்படுகிறது.இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் பட்சத்தில் ரஜினியின் கோபம் தணியும் என்று சொல்லப்படுகிறது.