நான் இப்படி தான் இருப்பேன்..எதுக்கு மாறனும்..அடம் பிடிக்கும் தனுஷ்
அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம். சமூக வளைதலங்கள் மட்டுமின்றி பெரும்பாலான ஊடகங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தன.
கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக தங்களது சமூக வளைதல பக்கங்களில் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு ரசிகர் மத்தியிலும் குடும்பத்தினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினரும்,நண்பர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.
தினம் தோறும் இருவரை பற்றி செய்தியானது அதிகமாக பேசும் பொருளாக உள்ளது. இதனிடையே நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது படங்களில் உள்ள வேலைகளை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவியை விட்டு பிரிந்தது குறித்து கருத்து தெரிவிக்க வரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே இருந்து விலகியிருக்கிறார். புதுப்படங்களில் நடிக்க ஓப்பந்தம் செய்வதில் நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையடுத்து அவர் யாருக்காகவும் தன்னுடைய முடிவை மாற்ற மாட்டேன் எனவும் மாறப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது