ஐஸ்வர்யாவை தொடர்ந்து சவுந்தர்யா வாழ்க்கையிலும் பிரச்சனையா? பெரும் சோகத்தில் ரஜினிகாந்த்

Dhanush Fight Divorce Husband Aishwarya Soundarya
By Thahir Feb 03, 2022 11:52 AM GMT
Report

ஜஸ்வர்யாவை தொடர்ந்து சவுந்தர்யாவும் தனது கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவித்திருந்தார்.அவரின் அந்த பதிவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இதையடுத்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சமதானப்படுத்த அவர்களது நண்பர்களும்,குடும்பத்தினரும் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும் கோபம் தணிய வேண்டும் என்றால் சேர்ந்து வாழ்வது மட்டுமே தீர்வாக இருக்கும் என கூறப்பட்டு வந்தது.

தனது அப்பாவுக்காக ஐஸ்வர்யா தனது முடிவை மாற்றி கொண்டதாகவும் ஆனால் நடிகர் தனுஷ் தனது முடிவில் இருந்து பின்வாங்க மறுப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் வீட்டிலும் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

சவுந்தர்யாவின் கணவர் விசாகன் தொழில் அதிபராக இருந்து வருகிறார்.ஆனால் அவர் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் திரைத்துரையில் பெரிய ஆளாக வளர முடியாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்த பிறகு தன் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது அவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் ஆனால் சவுந்தர்யா அதற்கு அனுமதி தர மறுத்து வருகிறாராம்.

சவுந்தர்யாவின் பேச்சை கேட்காமல் விசாகன் கதைகளை கேட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சவுந்தர்யா ஒரு இயக்குநர். அதனால் அவர் எப்படி தன் கணவரை படங்களில் நடிக்க வேண்டாம் என்று சொல்வார்.

தன் தந்தை ஒரு நடிகர், அதுவும் சூப்பர் ஸ்டார். அதனால் விசாகனின் நடிப்பு ஆசைக்கு சவுந்தர்யா தடையாக இருக்க மாட்டார் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே ஐஸ்வர்யா வாழ்க்கையால் நொந்து போய் உள்ள ரஜினிகாந்த் தனது மற்றொரு மகளால் மீண்டும் பெரும்  சோகத்தில் ஆழ்ந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது.

You May Like This