தனுஷுக்கு போன் செய்து பேசிய ரஜினி - ஐஸ்வர்யாவுடன் வாழ மாட்டேன் என அடம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ்.
இவரும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் சுமூகமாக சென்ற அவர்களது வாழ்க்கையில் அண்மை காலமாக அவர்களுக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனையடுத்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து நாளுக்கு நாள் செய்திகள் கசிந்து வருகின்றனர்.
மாமனாரும் நடிகருமான ரஜினிகாந்த் தனது மாப்பிள்ளையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது தனுஷிடம் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் தனுஷ் சேர்ந்து வாழ மாட்டேன்,
தற்போது தான் மன நிம்மதியாக இருப்பதாகவும்,சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ரஜினிகாந்த் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.