தனுஷ்,ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க ரஜினி எடுத்த அதிரடி முடிவு - க்ரீன் சிக்னல் கொடுத்த தனுஷ்
கடந்த மாதம் நடிகர் தனுஷும்,ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களது வாழ்க்கையில் இருந்த பிரிவதாக தங்களது சமூக வளைதல பக்கங்களில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் பிரிந்த இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினரும்,அவர்களது நண்பர்களும் முயன்று வருகின்றனர்.
இதையடுத்து அவரது ரசிகர்களும் இருவரையும் சேர்ந்து வாழ சொல்லி கோரிக்கை வைத்த வண்ணமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் தங்களது மகன்கள் யாத்ரா,லிங்காவுக்காக தனுஷும்,ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர் நடிகர் ரஜினிக்கும்,லதா ரஜினிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிய முடிவெடுத்த போது தங்களது மகள்களுக்காக மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்து வாழ்ந்து வந்ததுள்ளனர்.
அதே முறையை தற்போது ரஜினிகாந்த் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.தனுஷ்,ஐஸ்வர்யா சேர்த்து வைக்க அவர்களது மகன் யாத்ராவை துாது அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
யாத்ரா அறிவாளி பையன் என்றும் அவரின் அன்பு இருவரையும் சேர்த்து வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.