தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை - வெளியான புதிய தகவல்..!

Dhanush Divorce Aishwarya Tamilcinema NewInformation CinemaGroup
By Thahir Feb 14, 2022 01:40 AM GMT
Report

தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் நடிகர் தனுஷும்,ஐஸ்வர்யாவும் பிரிவதாக கூட்டாக தங்களது சமூக வளைதல பக்கங்களில் அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரவது குடும்பத்தினரை அதிர்வுக்குள்ளாகியது. இதனிடையே இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு இடையே கடந்த 6 ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாகி இருவரும் பிரிவு அறிவிப்பை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பல ஆண்டுகள் பிரச்சனையுடன் வாழ்ந்து வந்த இவர்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்று சினிமா வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

இவர்களின் பிரிவு அறிவிப்பிலிருந்து நடிகர் ரஜினி கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.