மாமியாருக்கே விபூதி அடிக்கும் நடிகர் தனுஷ்..!

Dhanush Telugu Divorce Producers Aishwarya ரஜினிகாந்த் தனுஷ் ஐஸ்வர்யா LathaRajinikanth லதாரஜினிகாந்த்
By Thahir Mar 31, 2022 07:18 PM GMT
Report

தனுஷின் விவாகரத்து நிகழ்வால் மனைவி ஐஸ்வர்யாவின் தாய் லதா ரஜினிகாந்த் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகின.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த மாதம் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தளம் பக்கம் மூலம் அறிவித்தனர்.

இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் தன் மகளை பிரிந்துவிட்டதால் தனுஷ் மீது மாமியார் லதா ரஜினிகாந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு இனி தனுஷுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று கூறி வருவதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் லதா ரஜினிகாந்திற்கு விபூதி அடிக்கும் விதமாக நடிகர் தனுஷ் தெலுங்கு தயாரிப்பாளர்கள் மூலம் படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.