உங்கள இப்படி பார்க்க முடியல - தனுஷுடன் சேர்ந்துவிடுங்கள் ரசிகர்கள் உருக்கம்..!

Dhanush Fans Divorce Request Aishwarya ரஜினிகாந்த் ஐஸ்வர்யா நடிகர்தனுஷ்
By Thahir Apr 15, 2022 08:57 AM GMT
Report

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஐஸ்வர்யாவை பார்த்து அவரது ரசிகர்கள் கலங்கிபோய் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷை ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த அவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர்.

அவர்களின் பிரிந்து கிட்டதட்ட 3 மாதங்கள் நிறைவு பெற்றது.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவின் ஆல்பத்திற்கு வாழ்த்து கூறிய தனுஷ் தோழி என குறிப்பிட்டிருந்தார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் ஐஸ்வர்யாவும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் தனுஷ் பெயரை மாற்றி ரஜினி என சேர்த்து கொண்டார்.ஐஸ்வர்யா தனது சமூக வளைத்தல பக்கத்தில் போட்டோக்களை பகிர்ந்து அப்டேட் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தமிழ் புத்தாண்டையொட்டி தான் தனியாக அமர்ந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்து வாழ்த்து கூறினார்.

இதை பார்த்து வரும் நெட்டிசன்கள் மீண்டும் தனுஷுடன் சேர்ந்துவிடுங்கள் என உருக்கமாக கூறி வருகின்றனர்.

உங்கள இப்படி பார்க்க முடியல - தனுஷுடன் சேர்ந்துவிடுங்கள் ரசிகர்கள் உருக்கம்..! | Dhanush Aishwarya Divorce Fans Request

ஐஸ்வர்யாவின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், ப்ளீஸ் தனுஷ் அண்ணா கூட சேர்ந்துவிடுங்கள் மேடம், உங்களை இப்படி தனியாக பார்க்க கஷ்டமா இருக்கு.. போன வருஷம் புத்தாண்டு ஒண்ணா கொண்டாடுனீங்க... ஆனா இந்த வருஷம்... ப்ளீஸ் மேம் சேர்ந்துடுங்க என பதிவிட்டுள்ளார்.