முசாபிர் காதலில் பிசியான ஐஸ்வர்யா...ஷாக் ஆன தனுஷ் ரசிகர்கள்
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கி வரும் காதல் பாடல் முசாபிர். இந்த பாடல் தமிழில் பயணி என்ற பெயரில் வெளியாக உள்ளது.
மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவிருக்கும் முசாபிர் பாடல் குறித்து தொடர் அப்டேட்களை கொடுத்து வருகிறார் ஐஸ்வர்யா.
முசாபிர் பாடல் படம் ஆக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது முழு வீடியோ காட்சியை வெளியிட காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகளை பார்த்த நடிகர் தனுஷின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், ஐஸ்வர்யாவுக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர்,
இந்த வீடியோவில் தங்களது பெயருக்கு பின்னால் தனுஷின் பெயரையும் சேர்க்க சொல்லி வருகின்றனர்.
அண்மையில் நடிகர் தனுஷும்,ஐஸ்வர்யாவும் பிரிந்த நிலையில் அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
