நடிகர் தனுஷை சந்தித்த ரஜினிகாந்த் - வெளியான சுவாரஸ்ய தகவல்

AishwaryaDhanush DhanushAishwarya DhanushMeetRajinikanth FirstMeetRajinikanth
By Thahir Mar 03, 2022 07:15 AM GMT
Report

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மூத்த மகளை கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சந்தோஷமாக கடந்த 18 ஆண்டுகளாக வாழந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடையே அண்மை காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷை சந்தித்த ரஜினிகாந்த் - வெளியான சுவாரஸ்ய தகவல் | Dhanush Aishwarya Divorce Before Meet Rajinikanth

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ்,மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கூட்டாக சமூக வளைதலத்தில் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

இவர்களின் இந்த அறிவிப்பு அவர்களது ரசிகர்கள் மத்தியிலும்,குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே நடிகர் தனுஷ் தனது மாமனாரின் தீவிர ரசிகராக இருந்து வந்தார். சினிமாதுறையை கடந்தும் தனது வாழ்க்கையிலும் நடிகர் தனுஷ் அவரை பின்பற்றி வந்தார்.

நடிகர் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அதில் ரஜினியாக நடிக்க ஆசை என தனுஷ் பலமுறை பேட்டிகளில் கூறியிருந்தார்.

நடிகர் தனுஷ்,ரஜினிகாந்தை முதன்முதலில் எங்கு சந்தித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் காதல் கொண்டேன் திரைப்படம்.

தனுஷின் இரண்டாவது திரைப்படம் அவரின் திரை வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. காதல் கொண்டேன் திரைப்படம் ரஜினிகாந்திற்கு பிரத்யேகமாக படமாக்கப்பட்டது.

அப்போது தான் நடிகர் தனுஷை சந்தித்தாராம் நடிகர் ரஜினிகாந்த். அப்போது சந்தித்த போது தனுஷை வெகுவாக பாராட்டிய ரஜனியிடம் தனுஷ் தான் உங்கள் தீவிர ரசிகர் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.