என்ன சொன்னாலும் கேட்க மாட்டிக்கிறானே...புலம்பி தள்ளும் நடிகர் தனுஷ் அப்பா..!
நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா விவகாரத்தில் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருப்பதால் அவரின் தந்தை கஸ்துாரி ராஜா கடும் குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 1991 ஆண்டு ராசாவின் மனசிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கஸ்துாரி ராஜா. பல தமிழ் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இருவரும் சினிமாவில் கொடி கட்டி பறக்கின்றனர்.மூத்த மகன் செல்வராகவன் முன்னணி இயக்குநராகவும்,இளைய மகன் தனுஷ் சிறந்த நடிகராகவும் வலம் வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
18 ஆண்டுகளாம் சந்தோஷமாக வாழந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் விவகாரத்து செய்வதாக அறிவித்தனர்.
இவர்களின் இந்த அறிவிப்பு அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும்,ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு பிரிவதாக அறிவித்த பின்னர,தங்களது வேலைகளில் பிசியாக மாறினர். இதையடுத்து அவர்கள் பார்டி ஒன்றில் நேருக்கு நேர் சந்தித்த போது கூட பேசவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் தந்தை கஸ்துாரி ராஜா இருவரும் விவாகரத்து செய்யவில்லை,பிரிந்துதான் வாழ்ந்து வருகிறார்கள்.இது தற்காலிகமான ஒன்று என்றார்.
இதனிடையே தனுஷ் விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பார் என்று கஸ்துாரி ராஜா எண்ணி கொண்டிருந்த நிலையில் நடிகர் தனுஷ் வாய் திறக்காமல் மௌம் காத்து வருகிறார்.
அவரின் மௌனத்தால் கஸ்துாரி ராஜா கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் புலம் தள்ளி வருவதாகவும் சொல்லப்படுகிறது.