ரஜினிக்காக தனுஷ்- ஐஸ்வர்யா செய்த தியாகம் : நெகிழும் ரசிகர்கள்
நடிகர் ரஜினிக்காக தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி செய்த சம்பவம் குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் அறிவித்தனர்.
இருவரையும் இணைக்க இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஜினியும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மகன்கள் யாத்ரா, லிங்காவின் நலனுக்காகவாது சேர்ந்து வாழுமாறு தனுஷ் - ஐஸ்வர்யாவிடம் ரஜினி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவு செய்யப்படதாகவும், அப்போது மகன்களை காரணம் காட்டி ரஜினி தலையிட்டு பிரச்சனையை தீர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது என்கிற நிலைக்கு வந்த பிறகே பிரிந்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.