ஐஸ்வர்யாவை பாராட்டி பேசிய பிரபுதேவா..வைரலாகும் வீடியோ

AishwaryaR.Dhanush AishwaryaAlbum PrabhuDeva PrabhuDevaPraise
By Thahir Mar 11, 2022 06:18 PM GMT
Report

பிரபல நடன இயக்குநரும்,நடிகருமான பிரபு தேவா,ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

18 ஆண்டுகாலம் சந்தோஷமாக வாழ்ந்து வந்த அவர்களது வாழ்க்கையில் திடீர் விரிசல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர்.

அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக இருந்து வந்தனர்.

ஐஸ்வர்யா தனது ஆல்பம் தயாரிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்புகளில் பிசியாக இருந்து வந்த அவர் தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரின் 4 மொழிகளில் வெளியாக உள்ள பயணி ஆல்பம் பாடல்,அன்கித் திவாரி இசையமைத்துள்ளார். இப்பாடலை தமிழில் அனிருத்,மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என இசை கலைஞர்கள் பாடியுள்ளனர்.

இந்த ஆல்பம் பாடல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் பல்வேறு சினிமா திரைப்பிரபலங்கள் ஐஸ்வர்யாவை பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே பிரபல நடன இயக்குனரும்,நடிகருமான பிரபு தேவா, ஐஸ்வர்யாவை வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.