நண்பர்களுக்கு திடீரென்று கண்டிஷன் போட்ட தனுஷ் - வெளியான புதிய தகவல் - நடந்தது என்ன?
நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவதாக சமீபத்தல் இருவரும் அறிவித்தனர். இன்னமும் அவர்கள் மீண்டும் சேர்ந்து விட மாட்டார்களா என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறான செய்திகளே தினம் தினம் வெளியாகிக்கொண்டிருக்கிறது. தனுஷை எப்படியாவது வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனாலேயே ஷூட்டிங் ஷூட்டிங் என்று ஐதராபாத்திலேயே இருந்து வருகிறார் தனுஷ். வீட்டிலிருந்து தொடர்பு கொள்பவர்கள் இதைப்பற்றிதான் பேசுகிறார்கள் என்று அவர்களிடம் எரிந்து விழும் தனுஷ் தனது நட்பு வட்டத்திலும் சில கண்டிஷன்களை போட்டிருக்கிறார்.
அதவாது சினிமா வட்டாரத்தில் உள்ள அவருக்கு நெருக்கமான சிலர் விவாகரத்து முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று கூறி வருகிறார்களாம். அதோடு இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்களாம்.
இதனை அறிந்த தனுஷ், தன்னிடம் பேச வரும் நண்பர்களிடம் அதைப்பற்றி மட்டும் பேசாதீர்கள் என்று முகத்தில் பட்டென்று அடிப்பது போல் சொல்லி விடுகிறாராம்.
மேலும் விவாகரத்து வேண்டாம், சேர்ந்து வாழுங்கள் என்று கூறுபவர்களிடமிருந்து விலகி கொள்கிறாராம் தனுஷ். இனிமேல் சினிமாவில் கவனம் செலுத்துவது மட்டுமே தனது வேலை என்று கூறி வரும் தனுஷ், கைவசம் இருக்கும் படங்களை விரைந்து முடித்து விட்டு புதிய கதைகளை கேட்கும் முடிவிலும் இருக்கிறாராம்.
You May Like This