ஐஸ்வர்யா பிரிவால் தனுஷ் வீட்டில் இவர்தான் ரொம்ப நொந்து போயுள்ளாராம் - ரசிகர்கள் சோகம்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து முடிவில் ரஜினிக்கு அடுத்து மிகவும் உடைந்து போயுள்ள நபர் யார் என்றால் அது செல்வராகவன் தான்.
இவர்கள் இருவரும் விவாகரத்து அறிவிப்புக்கு முன்னர், சூசகமாக தனது டுவிட்டர் பக்கத்தில் செல்வராகவன், கோபத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாகதான் இருக்கும் என்று பதிவிட்டிருந்தார்.
செல்வராகவின் இந்த டுவிட்டைப் பார்த்த ரசிகர்கள் குழம்பினர். யாருக்கு இவர் இந்த டுவிட்டை போட்டுள்ளார் என்று கேட்டு வந்தனர். இதற்கு பிறகுதான், ஐஸ்வர்யா-தனுஷ் விவாகரத்து முடிவை சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர். இவர்களின் அறிவிப்பால் தனுஷ் குடும்பத்தில் செல்வராகவன் தான் மிகவும் நொந்து போயுள்ளார்.
ஐஸ்வர்யா தங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்ததிலிருந்தே அவருடன் ஒரு தந்தை-மகள் உறவை ஏற்படுத்திக்கொண்டார் செல்வராகவன். ஐஸ்வர்யாவுடன் இருக்கும் போட்டோக்களில் எல்லாம் மகளுடன்... என்று குறிப்பிட்டே கேப்ஷன் கொடுத்திருந்தார் செல்வராகவன்.
அதேபோல், ஐஸ்வர்யாவும் செல்வ ராகவனை தனது அப்பா ஸ்தானத்தில் தான் பார்த்துள்ளார். ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிவதில் செல்வராகவனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.
இவர்களை சமாதானம் செய்து சேர்த்து வைக்க அவர் பலமுறை பேசியுள்ளாராம். ஆனால் இருவருமே இறங்கி வருவதாய் இல்லையாம். இதனால், ரொம்பவே வருத்தத்தில் செல்வராகவன் இருக்கிறாராம்.
மகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளதால் ஒரு அப்பா உணர்வில் தனக்கு இது பெரிய வலியாக இருக்கிறது என்று கூறி வருகிறாராம்.
தனுஷுடனான உறவே வேண்டாம் என்று ஒதுங்கிய போதும் செல்வராகவனின் பிறந்த நாளையொட்டி அவரை கட்டியணைத்தப்படி இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ஐஸ்வர்யா வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.