ஒரே ஓட்டலில் தங்கியிருக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா - ஒன்று சேர்ந்துவிட்டார்களா? - ரசிகர்கள் மகிழ்ச்சி
சில நாட்களுக்கு முன்பு தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக ஊடகங்களுக்கு தகவல் அறிவித்தனர். இதனால், சமூகவலைத்தளங்களில் இது குறித்து பரபரப்பு நிலவி வருகிறது.
ஆனால், அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது ஹைதராபாத்தில் தங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
தனுஷ் தற்போது ‘வாத்தி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் இருக்கும் ‘சித்தாரா’ ஹோட்டலில் தங்கி இருக்கிறார்கள். அதைப்போல் ஐஸ்வர்யாவும் ஒரு லவ் சாங் டைரக்ட் செய்வதற்காக அதே ஹோட்டலில் தான் தங்கி உள்ளார்.
இவர்களின் பிரிவு குறித்து தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்தார். வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்கள் இருவருக்கும் இருக்கிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடையாது. மேலும், ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் நான் சில அறிவுரைகளை கூறி இருக்கிறேன். அதன்படி அவர்கள் இருவரும் விரைவில் ஒன்று சேருவார்கள் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் இந்த விவாகரத்து முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் ஆசை தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது இருவரும் ஒன்றாக ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் இந்த செய்தி ரசிகர்களையும், சினிமா பிரபலங்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இதனால் அவர்கள் இருவரும் விரைவில் ஒன்று சேருவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.