நடிகை சமந்தா - நடிகர் தனுஷ் விவாகரத்திற்கு இந்த இயக்குநர்தான் முக்கிய காரணமாம்? - ஷாக்கான ரசிகர்கள்
நடிகை சமந்தா தன்னுடைய காதல் கணவரான நாகசைதன்யாவை விவகாரத்து செய்து பிரிந்துள்ளார். இதனையடுத்து, நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து செய்து பிரியப்போவதாக அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டனர்.
இவர்களின் திருமண வாழ்க்கை இந்த அளவில் பிரிவிற்கு காரணம் இந்த பிரபலம் தான் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் சாய் பல்லவியுடன் ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நாகசைதன்யா நடித்தார். இப்படம் ரிலீஸான அடுத்த நாட்களிலேயே நடிகை சமந்தாவும், நாக சைத்யாவும் பிரிந்துவிட்டனர்.
அதேபோல் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ஒப்பந்தமான அடுத்த ஓரிரு நாட்களிலேயே தன் காதல் மனைவியான ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்துள்ளார் தனுஷ்.
இதனையடுத்து, இந்த இயக்குநர் சேகர் கம்முலா படத்தில் கமிட்டான இவர்களின் திருமண வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே... இந்த இயக்குநர் சேகர் கம்முலா ஒரு விவாகரத்து ஸ்பெஷலிஸ்ட். அவர் ராசி அப்படிதான் போல... என்று சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்னும் சில நெட்டிசன்கள்... நடிகை சமந்தா பிரிந்ததற்கு வேறு காரணம் இருக்கும்.. அதேபோல் நடிகர் தனுஷ் பிரிந்ததற்கு வேறு காரணம் இருக்கும்.. ஆனால், இவர்கள் நடுவில் சேகர் கம்முலா எங்கிருந்து வந்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.