ரஜினி கொடுத்த அதிர்ஷ்ட ருத்ராட்சத்தை திருப்பி கொடுப்பாரா தனுஷ்? - அதிரும் சமூகவலைத்தளம்
ரஜினி மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷும் ‘பிரிகிறோம்’ என்று சமூகவலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டனர். இதனால் சமூகவலைத்தளங்களில் அடங்காத அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிவுக்கு உண்மையான காரணம் என்னவாக இருந்தாலும், ஐஸ்வர்யாவை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்களின் பஞ்சாயத்துகளும், தீர்ப்புகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
தனுஷிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, தனது பொருட்கள் யாவற்றையும் எடுத்து தன் அப்பா வீட்டுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால், மகன்களின் நிலை என்னவாகும்? என்பதுதான் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
குறிப்பாக, இந்தப் பிரச்சினை ரஜினியை புரட்டிப்போட்டுள்ளது. செளந்தர்யா விவாகரத்து செய்த போது கூட அவரது மகன் வேத் மிக சிறிய பையன், விபரமே தெரியாது. ஆனால், ஐஸ்வர்யா விஷயத்தில் நிலைமை தலைகீழ். லிங்கா, யாத்ரா இருவருமே நன்கு விபரமறிந்த பசங்க. இதுதான் பெரிய வருத்தமாக உள்ளது ரஜினிக்கு.
இது இப்படியிருக்க, தன் மருமகன் தனுஷுக்கு அற்புதமான ருத்ராட்சம் ஒன்றை வழங்கினார் ரஜினி. அதை பெருமையாக எல்லோரிடமும் காட்டி, தன் கழுத்தில் தொங்கவிட்டுள்ளார் தனுஷ். அந்த ருத்ராட்சம் அவரிடம் சேர்ந்த பிறகுதான் அவருடைய ராசி ரொம்ப பெரிய உச்சதை தொட்டது. அவ்வளவு அதிர்ஷ்டகார ருத்ராட்சம் என்று 2 குடும்பத்திலும் ஒரு பேச்சு உள்ளது.
இந்நிலையில், அந்த ருத்ராட்சத்தை தனுஷ் திருப்பி ஒப்படைப்பாரா ரஜினியிடம்? என்பது தற்போது கேள்வியாக எழுந்திருக்கிறது. “சாரோட பொண்ணையே வேண்டாமுன்னு சொல்லிட்டியேப்பா. அந்த ருத்ராட்சம் மட்டும் எதுக்கு? திருப்பி கொடுத்துடுப்பா என்று ரஜினியின் நண்பர்களான சில சீனியர் மனிதர்கள், தனுஷின் கவனத்துக்கு போகும் வகையில் அவரது குடும்பத்தினரிடம் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.