மீண்டும் அழுது புலம்பிய சவுந்தர்யா... - ஐஸ்வர்யாவை வெச்சு விளாசிய ரஜினி - ஷாக்கான ரசிகர்கள்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பட வேலைகளில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் தங்கையான சவுந்தர்யாவின் கணவர் விசாகன் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஐஸ்வர்யாவிடம் அவர் கதைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விசாகன் நடிக்க ஆர்வமாக இருப்பது சவுந்தர்யாவுக்கு பிடிக்கவில்லையாம்.
இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தகவல் பரவி வருகிறது. கணவர் சினிமாவில் நுழைவதே சவுந்தர்யாவிற்கு பிடிக்காத நிலையில், ஐஸ்வர்யா, விசாகனிடம் கதை கூறி வருவது சவுந்தர்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட, ஐஸ்வர்யா மீதும் சவுந்தர்யா கடுப்பானதாக உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, தன் அப்பா ரஜினியிடம் சென்று சவுந்தர்யா அழுதுள்ளார். அக்காவை கொஞ்சம் கண்டிச்சு வைங்க... இதெல்லாம் எனக்கு பிடிக்கல... என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, ஐஸ்வர்யா, தனுஷ் விஷயத்தில் நொந்து போய் இருக்கும் ரஜினி சரிவர யாரிடம் பேசாமல் அமைதியாக இருந்து வந்தார்.
இந்நிலையில், மீண்டும் சவுந்தர்யா தந்தையிடம் சென்று கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ரஜினி, ஐஸ்வர்யாவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியதாக கூறப்படுகிறது.
குழந்தைகளை பார்த்துக்கொள்... அவர்கள் மீது கவனம் செலுத்து... என ஐஸ்வர்யாவை கடுமையாக எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.