ஐஸ்வர்யாவை தோழி... என்று சொன்ன தனுஷ் - கடுப்பில் தனுஷை வெச்சு விளாசும் ரசிகர்கள்

dhanush aishwarya ரஜினிகாந்த் தனுஷ் ஐஸ்வர்யா broke-up rajinikanth-upset முசாபிர் ஆல்பம் பயணி
By Nandhini Mar 18, 2022 06:04 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்கிய ஆல்பம் நேற்று வெளியானது. இந்த ஆல்பத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இதற்கு ஐஸ்வர்யாவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எல்லாருமே ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வந்த போது, ரசிகர்கள் தனுஷ் வாழ்த்து சொல்லமாட்டாரா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென டுவிட்டர் பக்கம் வந்த தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில் ஐஸ்வர்யாவை தோழி என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

என்னது... தோழியா... என்ன உருட்டு உருட்டுறாருப்பா.. டோலியாம்மா டோலி... என்று ரசிகர்கள் தனுஷை வெச்சு விளாசத் தொடங்கி விட்டனர்.

மேலும், ரசிகர்கள் ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் இருந்து இன்னும் உங்கள் பெயரை நீக்கவில்லை, ஆனால் நீங்கள் அவரை மனைவி ஸ்தானத்தில் இருந்து இறக்கி தோழி என்று குறிப்பிட்டு விட்டீர்களே என்று எதிர்ப்பு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் இந்த வாழ்த்து டிவிட்டுக்கு 2 மணி நேரம் கழித்து பதில் கொடுத்த ஐஸ்வர்யா நன்றி தனுஷ் என குறிப்பிட்டார். ஐஸ்வர்யாவின் நிதானத்தைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா என்று பாராட்டத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், சில ரசிகர்கள் எப்படியும் சேர்ந்து விடுவீர்கள் என்று நம்பியிருந்தோம். அந்த மொத்த நம்பிக்கையையும் இப்படி பாழாக்கிவிட்டீர்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.