நொறுங்கிப்போன ஐஸ்வர்யாவை வாழ்த்து மழையில் நனைய வைத்த ரஜினிகாந்த் - ரசிகர்கள் மகிழ்ச்சி

dhanush aishwarya rajinikanth ரஜினிகாந்த் தனுஷ் ஐஸ்வர்யா broke-up முசாபிர் Payani song பயணி
By Nandhini Mar 17, 2022 12:01 PM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா, முதல் முறையாக ‘காதல் பாடல்’ வீடியோவை இயக்கி வந்தார். ‘முசாபிர்’ எனும் அந்த காதல் பாடலின் கதை ஐஸ்வர்யாவின் நிஜ கதையோடு ஒத்துப்போகும் காதல் கதையாம்.

அனிருத்தின் இசை மனதை துளைக்க, ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருந்த தமிழில் ‘பயணி’ என்ற தலைப்பில் இப்பாடல் தற்போது வெளியாகி உள்ளது. வெளியான சில மணி நேரத்திலேயே லைக்குகளை அள்ளிக்கொண்டிருக்கும் இப்பாடலின் வரிகள் நம் மனதை இதமாக்குகின்றன.

இப்பாடலைக் கேட்ட ஐஸ்வர்யாவின் தந்தை நடிகர் ரஜினிகாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில் மகளுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். விவாகரத்து அறிவிப்பால் கடுமையாக திட்டித் தீர்த்த ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவிடம் பேசாமல் புறக்கணித்தார்.

இதனால், ஐஸ்வர்யா தந்தை பேசாமல் இருப்பதைப் பார்த்து துடித்துப்போனார்.

மகள் படும் வேதனையை தாங்கிக்கொள்ளாத ரஜினிகாந்த், தற்போது ஐஸ்வர்யாவை வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளார்.

இப்பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதால், ஐஸ்வர்யாவிற்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.