‘உன் படம் ஓடுமா?... நல்ல மனசு இருந்தா உடனே சேர்ந்திருக்க வேண்டும்...’ - தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்
நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
2 குழந்தைகள் பெற்ற பிறகு இப்படி விவாகரத்து செய்து விலகி போகிறார்கள். ஒரு பெரிய ஸ்டாராக இருக்கும் நடிகரின் குடும்பத்தில் இப்படிப்பட்ட விவாகரத்து விஷயங்கள் நடந்தால் அவரை பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள். இதன் பிறகு உன் படம் ஓடுமா? நீ சொல்வதை மக்கள் துளியளவும் கேட்பார்களா? இப்படி நடக்கக்கூடாது என்பதற்காக நான் வருத்தப்பட்டு பேசுகிறேன்.
குழந்தைகளைப் பாருங்க... குழந்தைகளுக்காக உங்களின் ஆசைகளை தூக்கிப்போடுங்க. குழந்தைகளின் மனது என்ன பாடுபடும்? அப்பா கெஞ்சியிருக்காரு. ரஜினி சார் பேசியிருக்காரு. தற்போது ஒன்றரை மாதம் ஆகிவிட்டது.
இன்னும் ஒரு முடிவு கூட சொல்லவில்லை. நல்ல மனிதர்கள் என்றால், நல்ல மனம் உள்ளவர்கள் என்றால் உடனே ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். நாம் பெற்ற குழந்தைகள் அனாதையா ஆதரவற்று இருந்தால் யாராவது ஒத்துக்கொள்வார்களா? எப்படிதான் ஒன்றரை மாதமாக பிரிந்து இருக்கிறீர்களோ என்று எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.