தனுஷ் எடுக்கும் அந்த ஒரு முடிவுக்கு ரஜினி சம்மதிப்பாரா? - வெடித்தது புது சர்ச்சை

dhanush aishwarya தனுஷ் ஐஸ்வர்யா ரஜினி broke-up rajinikanth-upset விவாகரத்து இளைய சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் குழப்பம்
By Nandhini Feb 28, 2022 05:58 AM GMT
Report

கடந்த மாதம் நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

தனுஷ் எடுக்கும் அந்த ஒரு முடிவுக்கு ரஜினி சம்மதிப்பாரா? - வெடித்தது புது சர்ச்சை | Dhanush Aishwarya Broke Up Rajinikanth Upset

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தனுஷிற்கு ‘இளைய சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் வைப்பதாக சிலர் கூறி வந்தார்கள். ஆனால், ஆரம்பத்திலிருந்து இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார் தனுஷ்.

இந்த டைட்டில் வைத்துக் கொள்ளுங்கள் தனுஷ்... என்று சில தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வந்தனர். ஆனால், அதற்கு எந்தவொரு மாற்று கருத்தும் சொல்லாமல் இருந்து வந்தார் தனுஷ்.

இந்நிலையில், விரைவில் படத்தில் ‘இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ்’ என்று வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

தற்போது, ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்துள்ளதால் மனவேதனையில் இருந்து வருகிறார் ரஜினி.

இந்நிலையில், ஒருவேளை தனுஷ் அந்த ‘இளைய சூப்பர் ஸ்டார்’ டைட்டிலை வைக்கலாம் என்று எண்ணினாலும், அதற்கு சூப்பர் ஸ்டாரான ரஜினி சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறியே? என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.