‘எவன்.. என்ன சொன்னாலும்.. எனக்கு கவலையே இல்லை..’ - தனுஷ் செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்
கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமாத்துறையையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான நடிகர் ரஜினி, தன்னுடைய செல்ல மகள் ஐஸ்வர்யாவை திட்டித் தீர்த்தார். தந்தையின் கோபத்தை பார்த்து மிரண்டு போன ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தார்.
ஆனால், தனுஷ் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கறாராக தெரிவித்து விட்டார். இதனால், இரு குடும்பத்தினரும் இவர்களை ஒன்றாக சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
தற்போது, நடிகர் தனுஷ், ‘வாத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் தனுஷுடன், காவ்யா ஸ்ரீராமுடன் சேர்ந்து உணவகத்திற்கு சென்று சாப்பிட்டிருக்கிறார்.
இப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷுடன் சேர்ந்து சாப்பிடும் அந்த இளம்பெண் யார் என்று ரசிகர்கள் பலர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும்போது, காவ்யாவுடன் சேர்ந்து உணவகத்திற்கு சென்றால், இன்னும் பிரச்சினைகள் அதிகமாகும் என்று தனுஷுக்கு தெரியும். இருந்தும் தனுஷ் வேண்டுமென்றே இப்படி செய்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்தால் ரஜினி மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இரு வீட்டாரும் சமரசம் பேசியும், இருவரும் சேர்ந்து வாழ போவதுபோல் தெரியவில்லை. ஆனால், தனுஷோ... அடுத்தவர்களுக்காக வாழ முடியாது என்று தன் மனம் போன்று சிங்கிளாகதான் இருக்கப்போகிறேன் என்று அடம்பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.