தலைவருக்கு என்ன ஆச்சு...? அவசர அவசரமாக அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக செல்லும் ரஜினி - ஷாக்கான ரசிகர்கள்
நடிகர் ரஜனி அவசர அவசரமாக அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, அவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடிப்பால் அனைவரின் மனதை கவர்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கென்று மாபெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
சமீபத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சமூகவலைத்தளத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து போவதாக அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பு ரஜினியை மிகவும் மன அழுத்தத்திற்கு தள்ளி விட்டது. இதனால் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார் ரஜினி.
திடீரென்று அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக செல்லப்போகிறார் என்று சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியானதால், தலைவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவர் அமெரிக்கா செல்வதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
விஜய்யின் பீஸ்ட் (Beast) படத்தை இயக்கி முடித்திருக்கும் இயக்குநர் நெல்சன், சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதையை கூறியிருக்கிறார். அந்தக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனையடுத்து, நெல்சன் படத்தில் நடிக்க ரஜினி ஓ.கே சொல்லிவிட்டார்.
தலைவர் ரஜினி 169 படப்பிடிப்பு துவங்க இன்னும் 2 மாதம் மட்டுமே உள்ளது. இதனால், நடிகர் ரஜினி தனது வழக்கமான ஹெல்த் செக்கப்பிற்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் சில தினங்கள் தங்கி இருந்து, தன்னுடைய வழக்கமான செக்கப்பை முடித்து விட்டு பின்னர் சென்னை திரும்பி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.
You May Like This