ரஜினியிடம் ரகசியமாக தனுஷைப் பற்றி போட்டுக்கொடுத்த பிரபல நடிகை? - ஷாக்கான ரஜினி

dhanush aishwarya தனுஷ் ஐஸ்வர்யா broke-up rajinikanth-upset விவாகரத்து ரஜினி வேதனை
By Nandhini Feb 18, 2022 08:06 AM GMT
Report

கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமாத்துறையும் அதிர்ச்சி அடைந்தது. ரசிகர்கள் இருவரும் சேர்ந்து வாழும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஐஸ்வர்யா இந்த அறிவிப்பை வெளியிட்டதை அறிந்த நடிகர் ரஜினி கடும் கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறினார். பலர் சமாதானம் செய்தும் அவர் கோபம் இன்னும் தணியவில்லை.

கோபத்தில் செல்லமகளான ஐஸ்வர்யாவை திட்டித் தீர்த்தார் ரஜினி. தந்தையின் கோபத்தைப் பார்த்து பயந்து போன ஐஸ்வர்யா, தனுஷிடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளார்.

ரஜினியிடம் ரகசியமாக தனுஷைப் பற்றி போட்டுக்கொடுத்த பிரபல நடிகை? - ஷாக்கான ரஜினி | Dhanush Aishwarya Broke Up Rajinikanth Upset

ஆனால், தனுஷ் விடாப்பிடியாக நான் இனி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழப்போவதே இல்லை என்று கறாராக சொல்லிவிட்டுள்ளாராம். இதனால், செய்வது அறியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளது இரு குடும்பமும்.

இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தனுஷுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்த முன்னணி நடிகை சமீபத்தில் ரஜினியின் படத்திலும் நடித்திருந்தார்.

அப்போது, ரஜினியிடம் எதார்த்தமாக தனுஷைப்பற்றி பேசினாராம். அப்போது, அந்த பிரபல நடிகை தனுஷைப் பற்றி பல உண்மைகளை போட்டு கொடுத்துள்ளார். அதைக் கேட்டு நடிகர் ரஜினி அடைந்துள்ளாராம். இதுவும் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.