‘நீங்க மாப்பிள்ளை இல்ல... மகன்... உங்கள எப்படி விட்டுத் தருவேன்...’ - கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ரஜினி
கடந்த மாதம் இதே நாளில்தான் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக சமூகவலைத்தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இவர்களது அறிவிப்பால் ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் சேர்ந்து வாழும்படி ரசிகர்களும், நண்பர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். குடும்ப உறவினர்கள் இருவரிடமும் பேசி வருகின்றனர்.
இந்த அறிவிப்பால் அப்செட் ஆன ரஜினி, செல்ல மகளான ஐஸ்வர்யாவை திட்டித் தீர்த்தார். தந்தையின் கோபத்தை பார்த்து பயந்து போன ஐஸ்வர்யா, தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், தனுஷ் விடாப்பிடியாக இருந்து வருகிறார். தனுஷ் மீது நடிகர் ரஜினிக்கு தனிப்பட்ட அன்பு இருப்பதால்தான் தனுஷை விட்டு ஐஸ்வர்யா பிரிய சம்மதம் தெரிவிக்கவில்லை. வீட்டிற்கு வந்த மூத்த மருமகனை, மகனாக நினைத்தவர் ரஜினி என்று அவரது நெருங்கிய நண்பர்கள் சொல்கிறார்களாம்.
நடிகர் தனுஷுற்கு மூத்த மகன் யாத்ரா மேல் அளவுக்கடந்த அன்பு உள்ளது. தற்போது, யாத்ரா தன் அப்பா தனுஷுடன் தான் உள்ளார்.
யாத்ரா மிகவும் அறிவான பையனாம். அவரை அனுப்பி தனுஷிடம் பேச வைத்தால் நிச்சயம் மனம் மாறிவிடுவார் என்று நம்பிக்கை வைத்துள்ளார் ரஜினி. மகன்களுக்காக தனுஷ் மனம் மாறுவது மிகவும் கடினமான ஒன்று என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்பட்டபோது மகன்களுக்காக தான் தனுஷ் பொறுத்துப்போனதாக சொல்லப்படுகிறது.
மகன்களுக்காக தனுஷ் மனம் மாறுவரா? இல்லை தனிமையிலேயே இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முடிந்தவரை ரஜினியும் இவர்கள் விஷயத்தில் இறங்கி பேசிவிட்டார். ஆனால் தனுஷ் இன்னும் பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.