ஐஸ்வர்யாவிற்கு அம்மா லதா கொடுத்த ஐடியா...? வசமாக சிக்கிக்கொண்ட தனுஷ்...? - நடந்தது என்ன?

dhanush aishwarya broke-up rajinikanth-upset
By Nandhini Feb 03, 2022 09:52 AM GMT
Report

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து வாங்கி பிரிவதாக சமூகவலைத்தளத்தில் அறிவிப்பை வெளியிட்டனர். இதனால், நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வருகிறார். ரசிகர்களும் இவர்களது அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, இவர்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக பலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 

தனுஷ் - ஐஸ்வர்யா இடையே பிரச்சினை தொடங்கியது தனுஷ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பின்புதான் என்று சொல்லப்படுகிறது. தனக்கு பிடித்த நடிகைகளை தனது தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கொடுத்து வந்தார் தனுஷ். அந்த வகையில் நடிகை அமலாபால், தொகுப்பாளினி DD ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தார் தனுஷ்.தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பின்புதான் நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார் நடிகர் தனுஷ்.

தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி ஆகிய 2 படங்களைத் தவிர மற்ற அனைத்து படங்களும் பொருளாதார ரீதியில் படுதோல்வி அடைந்தது. இதனால் பெரு நஷ்டம் ஏற்பட்டது. கடன் சுமை அதிகமானதால் தனுஷ், ஒரு பிரபல டிவி நிர்வாக இயக்குநரிடம் சுமார் 80 கோடி வரை கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மருமகன் கடன் சுமையில் இருப்பதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் தனது மருமகன் தனுஷ் தயாரிப்பில் சம்பளம் வாங்காமல் நடித்த படம் தான் காலா. இப்படத்தில் கிடைத்த லாபத்தில் தனக்கு இருந்த கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு அடைந்த தனுஷ். இனி படம் தயாரிப்பதில்லை என முடிவு செய்து தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடினார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், இருவரையும் இணைக்க பேச்சுவார்தை நடத்தப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா தனுஷ்கூட சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் தனுஷ் பிடிவாதமாக மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா மற்றும் அவரது தாயார் லதா பல முயற்சி மேற்கொண்டும் பலன் இல்லாமல் போனது.

இந்நிலையில், தனுஷிடம் சில கோரிக்கைகளை ஐஸ்வர்யா வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ‘நீங்க கடனாளியாக இருந்த போது என் அப்பா தான் உதவினார். அவர் மகள் என்னை வேண்டாம் என முடிவு செய்த பின்பு ‘காலா’ படத்தில் எங்க அப்பா நடித்ததற்கு அவருக்கு கிடைக்க வேண்டிய தொகையை தர வேண்டும்’ என்று தனுஷை இறுக்கி பிடித்துள்ளார்.

எப்படி இவ்வளவு பெரிய பணத்தை கொடுப்பது என தப்பிக்க வழியின்றி சிக்கிக் கொண்டுள்ளார் தனுஷ். ஐஸ்வர்யாவிற்கு இந்த ஐடியா கொடுத்ததே அவரது தாயார் லதா தான் என்று சொல்லப்படுகிறது.  

ஐஸ்வர்யாவிற்கு அம்மா லதா கொடுத்த ஐடியா...? வசமாக சிக்கிக்கொண்ட தனுஷ்...? - நடந்தது என்ன? | Dhanush Aishwarya Broke Up Rajinikanth Upset