நான் செய்ததையே என் மருமகனும் செய்ய வேண்டும்... - எதிர்பார்ப்பில் ரஜினி
நான் செய்ததையே என் மருமகனும் செய்ய என்று நடிகர் ரஜினி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து, 18 ஆண்டுகள் வருடங்கள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டனர். இவர்களை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
இது குறித்து மகளிடம் ரஜினி, எனக்கும், லதாவுக்கும் இடையே கூட பல்வேறு பிரச்சனை வந்தது. ஆனால் நீயும், சவுந்தர்யாவும் முக்கியம் என்று நினைத்து நான் உங்க அம்மாவைவிட்டு பிரியவில்லை. ஆனால் நீயோ உன் சந்தோஷம் தான் முக்கியம் என்று தனுஷை பிரிந்துவிட்டாய் என்று கடுமையாக திட்டியிருக்கிறார்.
பிள்ளைகளுக்காக நான் செய்ததையே தனுஷும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால், ரஜினி செய்ததை செய்யும் மனநிலைமையில் தனுஷ் துளிகூட இல்லையாம்.
ரஜினியுடன் யாராவது ஒப்பிட்டு பேசினாலேயே, அவர் வேறு, நான் வேறு. அவர் நடிக்கும் படங்கள் வேறு, என் படங்கள் வேறு. அவருடன் ஒப்பிடாதீர்கள் என்று அடிக்கடி கூறுவார்.
அப்படி இருக்கும் பட்சத்தில், வாழ்க்கை விஷயத்தில் ரஜினிக்காக தனுஷ் மாற்றிக்கொள்வாரா என்ன?, கடந்த 6 ஆண்டுகளாகவே தனுஷ், ஐஸ்வர்யா இடையே பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. பிள்ளைகளுக்காக இருவரும் அமைதியாக இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் ஒரு கட்டத்தில் இனிமேலும் முடியாது என்று பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.