படப்பிடிப்பு தளத்தில் எதையோ பறிகொடுத்தது போல் இருக்கும் தனுஷ் - சோகத்தில் ரசிகர்கள்
சமீபத்தில் தான் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக அறிவித்தனர். தனுஷின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பிள்ளைக்காக இருவரும் சேர்ந்து வாழும்படி ரசிகர்களும், பிரபலங்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வேலை விஷயமாக ஹைதராபாத் சென்ற ஐஸ்வர்யா அங்கிருந்து தன் அப்பா ரஜினிகாந்த்திற்கு போன் செய்து பேசினார். போனை எடுத்த ரஜினி, ஐஸ்வர்யாவை திட்டித் தீர்த்து போனை கட் செய்து விட்டார்.
செல்ல மகளான என் முகத்தில் அறைந்தது போன்று போனை கட் செய்துவிட்டார் அப்பா, அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அம்மா லதாவிடம் கூறி கதறி அழுதுள்ளார் ஐஸ்வர்யா.
இதனால், ஐஸ்வர்யா மனம் மாறி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஐஸ்வர்யாவை பிரிந்ததில் இருந்து எதையோ பறிகொடுத்தது போன்று சோகத்திலேயே மூழ்கியிருக்கிறார் நடிகர் தனுஷ். படப்பிடிப்பு தளத்தில் கூட அவர் யாரிடமும் சரியாக பேசுவது கிடையாதாம்.
இதனால், விஷயம் புரிந்து கொண்டவர்கள், தனுஷை அவர் போக்கில் விட்டுவிடுகிறார்களாம். ஐஸ்வர்யாவை பிரிந்த வேகத்தில் அந்த சோகத்திலிருந்து வெளியே வர, தன்னுடைய கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் நடிகர்.